உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!
IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட; கணவன் – மனைவி கைது.!!!

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிறைந்துறைச்சேனையில் கணவனும், மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் நேற்று (13) வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்றது.

பிறைந்துறைச்சேனை 2 ஆம் குறுக்கு வீதியிலுள்ள வீடொன்றில் கணவனும், மனைவியும் இணைந்து சூட்சுமமான முறையில் போதைப்பொருட்களை விற்பனை செய்து வந்துள்ளனர்.

இதனை அவதானித்த பிரதேச பொதுமக்கள் அன்றைய தினம் போதைப்பொருள் வாங்க வந்த நபரை மடக்கிப் பிடித்ததுடன், வீட்டில் இருந்த கணவனும், மனைவியும் வீட்டை விட்டு தப்பிச் செல்லாத வகையில் வீட்டு நுழைவாயிலுக்குப் பூட்டுப் போட்டு அவர்களை சுமார் 10 மணித்தியாலயமாக முற்றுகையிட்டனர்.

இவ்விடயம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு அறிவித்ததக்கமைய பொலிஸார் நீதிமன்ற அனுமதியுடன் சம்பவ இடத்துக்கு வந்து கணவன், மனைவி இருவரையும் கைது செய்துள்ளனர்.

குறித்த பகுதியில் போதைப்பொருள் விற்பனையை கட்டுப்படுத்த பிரதேச மக்கள், சமூகமட்ட அமைப்புக்கள் ஒன்றிணைந்து பொலிஸாருக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 714052

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time