பொதுச் சந்தையை – பசுமைப்படுத்தும் வேலைத்திட்டம் இன்று முதல் ஆரம்பம்.!!!
(முஹம்மது)
அக்கரைப்பற்றில் நீண்ட காலமாக சீரமைப்புக்காக காத்திருந்த பொதுச் சந்தை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் சுத்தம் செய்யும் வேலைத்திட்டம் இன்று (26) முதல் ஆரம்பிக்கப்பட்டது.
அக்கரைப்பற்று மாநகர சபையின் ஏற்பாட்டில், மீன் சந்தை, பொதுச் சந்தை வீதி, ஜஸ்மில் வீதி போன்ற இடங்களில் உள்ள கழிவுகளை அகற்றும் பணி நடை பெறுகிறது.
இந்தச் செயல் திட்டம், அக்கரைப்பற்று மார்கெட் வர்த்தக ஒன்றியத்தின் வேண்டுகோளை தொடர்ந்து, அக்கரைப்பற்று மாநகர சபை முதல்வர் ஏ எல் எம் அதாவுல்லா அவர்களின் ஆலோசனையில் மாநகர சபை பிரதி மேயர் U.L. உவைஸ் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.
இந்நிகழ்வில்மாநகர சபை உறுப்பினர்களான அகமட் பாஹீம், ரியால், பாஸித் மற்றும் மாநகர சபை உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் என பலரும் கலந்துகொண்டு மீன் சந்தை பின்னால் உள்ள குப்பை மேட்டை அகற்றும் பணி முதல் கட்டமாக மேற்கொள்ளப்பட்டது.
மேலும், மீன் சந்தையின் கூரை மற்றும் கழிவகற்றல் வசதிகள் விரைவில் சீரமைக்கப்படும் எனவும், இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பிரதி மேயர் உவைஸ் உறுதியளித்துள்ளார்.


