உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

March 15, 2026

Hot News

IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!
IMG-20260301-WA0055
வளைகுடா போரும்: அழிவை நோக்கிய நகர்வுகளும்.!!!

புது மணப்பெண் நீரில் மூழ்கி மாயம்; காப்பாற்றச் சென்றவர் மரணம்.!!!

வார இறுதி விடுமுறையை கழிப்பதற்காக, புதிதாக திருமணமான ஜோடி உட்பட உறவினர்கள் சிலர், கழிமுகத்தில் குளித்துக் கொண்டிருந்த போது, மணப்பெண் நீரில் மாயமாகிவிட்டார். அவரை காப்பாற்றுவதற்காக கழிமுகத்தில் குதித்த சித்தப்பா மரணமடைந்துள்ளார் என வனாத்து வில்லுவ பொலிஸார் தெரிவித்தனர்.

காணாமல்போன மணமகளின் சித்தப்பாவான எம். ஃபரீன் (42) என்பவரே மரணமடைந்துள்ளார். நீரில் மூழ்கி காணாமல் போன புதிய மணப்பெண்ணான அப்சானா(22) இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று பொலிஸார் கூறுகின்றனர்.

மன்னார், கற்பிட்டி, வன்னி, முந்தலம், முகம்மதியா புரம் கிராமத்திற்கு தனது கணவர் மற்றும் உறவினர்களுடன் சமீபத்தில் அழைத்து வரப்பட்ட 22 வயதான அப்சானா, கற்பிட்டி களப்பு வழியாக ஒரு படகில் கங்கை வாடியா கழிமுகத்தில் குளிக்கச் சென்றிருந்தபோது விபத்து ஏற்பட்டது.

காணாமல் போன அப்சானாவைத் தேடும் பணிகளை கடற்படையின் விரைவு நடவடிக்கை பிரிவினர் தொடங்கியுள்ளனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 703480

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time