உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!
IMG-20260301-WA0055
வளைகுடா போரும்: அழிவை நோக்கிய நகர்வுகளும்.!!!

5 அரசியல் கட்சிகள் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளாக அங்கீகாரம் – தேசிய தேர்தல் ஆணைக்குழு.!!!

2025 ஆம் ஆண்டில் ஐந்து அரசியல் கட்சிகள் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தேசிய தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், 1981 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் சட்டத்தின் பிரிவு 7(4)(a) இன் கீழ், குறித்த அரசியல் கட்சிகள் முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, புதிதாக பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் பின்வருமாறு:

• சோசலிச கூட்டணி

• மக்கள் பங்கேற்பு ஜனநாயக முன்னணி

• மலையக அரசியல் அரங்கம்

• சமத்துவ கட்சி

• புரட்சிகர மக்கள் சக்தி

புதிய அரசியல் கட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளமை, நாட்டின் அரசியல் தளத்தில் புதிய கருத்துக்கள் மற்றும் மாற்றங்களை கொண்டு வரக்கூடும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இக்கட்சிகள் எதிர்வரும் தேர்தல் செயல்முறைகளில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 703719

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time