உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

வீதி விபத்துக்களை தடுக்க; துவிச்சக்கரவண்டிகளுக்கு ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டும் நடவடிக்கை – ஆரம்பித்து வைப்பு.!!!

(கனகராசா சரவணன்)

மட்டக்களப்பில் வீதி விபத்துக்களை தடுக்கும் முகமாக ஏறாவூர் பொலிஸ் பிரிவில் துவிச்சக்கரவண்டிகளுக்கு இரவு வேளைகளில் ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டும் நடவடிக்கையை செங்கலடி பிரதேசத்தில் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலாரத்ன ஆரம்பித்து வைத்தார்.

ஏறாவூர் பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி ஜே.எஸ்.ஏ. ஜயலத் தலைமையில் இடம் பெற்ற இந்த ஆரம்ப நிகழ்வில் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலாரத்ன, மாவட்ட போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி ஐ. பி சரச் சந்திர, ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட பொலிஸ் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

இதன்போது வீதியில் துவிச்சக்கரவண்டியில் பயணித்துக் கொண்டிருந்தவர்களை நிறுத்தி துவிச்சக்கரவண்டிகளுக்கு ஒளிரும் ஸ்டிக்கர்களை ஒட்டிவைத்தனர்.

Related News

Total Websites Views

Total Views: 258946

Search

விளம்பரங்கள்