உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!
IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!

திருட்டுச் சம்பவங்கள் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில்; பொதுமக்களுக்கு பொலிஸாரின் – முக்கிய அறிவித்தல்.!!!

(சம்மாந்துறை தில்சாத் பர்வீஸ்)

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில், அண்மைக்காலமாக வீடுகள் உடைக்கப்பட்டு திருட்டுச் சம்பவங்கள் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகள் அதிகரித்து காணப்படுகிறது.

திருட்டுச் சம்பவங்கள் பெரும் பாலும் வீட்டு உரிமையாளர்கள் உறவினர்களின் வீடுகளுக்கு, ஆடை கடைகளுக்கு மற்றும் வேறு தேவைகளுக்காக வீட்டை விட்டு வெளியேறும் சந்தர்ப்பங்களில் நடைபெறுகிறது.

இதேவேளை, வீட்டு ஜன்னல்களை உடைக்கும் குழுவினர் சம்மாந்துறை பிரதேசத்தில் நடமாடுவதாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எனவே, பொதுமக்கள் இச்சந்தர்ப்பத்தில் மிகவும் அவதானமாகவும், விழிப்புடணும் செயற்படுதல் அவசியமாகும். சந்தேகத்திற்குரிய வகையில் (குறிப்பாக இரவு வேளையில்) நடமாடுகின்றவர்கள் குறித்து சம்மாந்துறை பொலிஸ் நிலையத்திற்கு தகவல்களை வழங்குமாறு சம்மாந்துறை பொலிஸார் கேட்டுக் கொள்கின்றனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 714037

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time