ரஷ்யா அதிரடி அறிவிப்பு: எரிபொருள் விநியோகத்தில் இனி எந்த நாட்டின் அனுமதியும் தேவையில்லை.!!!
உக்ரைன் போரின் பின்னணியில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் விதித்துள்ள பொருளாதாரத் தடைகள் மற்றும் கட்டுப்பாடுகளை முழுமையாக புறக்கணிப்பதாக ரஷ்யா திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
சர்வதேச நாடுகளுக்கு எரிபொருள் மற்றும் எண்ணெய் விநியோகம் செய்வதில் இனி எந்தவொரு நாட்டின் அனுமதியையோ அல்லது ஒப்புதலையோ பெறப்போவதில்லை என ரஷ்யா தெரிவித்துள்ளது.
தன்னுடன் நட்பு உறவைப் பேணும் நாடுகளுக்கு தடையின்றி எண்ணெய் விநியோகத்தைத் தொடர்வதற்கும், வர்த்தக முடிவுகளை முழுமையான சுதந்திரத்துடன் மேற்கொள்வதற்கும் ரஷ்யா தயாராகி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உக்ரைன் போரைத் தொடர்ந்து மேற்கத்திய நாடுகள் விதித்துள்ள கடும் பொருளாதாரத் தடைகளுக்கு எதிரான பதிலடி நடவடிக்கையாகவே இந்த அறிவிப்பு பார்க்கப்படுகிறது.
ரஷ்யாவின் இந்தத் தன்னிச்சையான முடிவு உலகளாவிய அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், சர்வதேச எரிபொருள் சந்தையில் புதிய மாற்றங்களையும் தாக்கங்களையும் உருவாக்கக்கூடும் என அரசியல் மற்றும் பொருளாதார ஆய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.