உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260809-WA0043
பொதுமக்களின் நிம்மதிக்கு புதிய பாதுகாப்பு; ஒலி மாசுக்கு கடும் கட்டுப்பாடு.!!!
IMG-20260802-WA0014
தேசிய ஷுஹதாக்கள் தினம்: வரலாற்றின் இரத்தச் சுவடுகளும் நல்லிணக்கத்தின் அவசியமும்.!!!

Share :

உணவகங்கள், வீதியோர மரக்கறி கடைகளில் திடீர் சுகாதார சோதனை: தகுதியற்ற உணவுப் பொருட்கள் அழிப்பு.!!!

-பாறுக் ஷிஹான்-

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட உணவகங்கள் மற்றும் வீதியோர மரக்கறி விற்பனை நிலையங்கள் இன்று (04) பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இந்த பரிசோதனைகளின் போது, நுகர்விற்கு தகுதியற்ற உணவுப் பொருட்கள் மற்றும் மரக்கறிகள் கண்டறியப்பட்டதுடன், அவை பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக அவ்விடத்திலேயே அகற்றப்பட்டு அழிக்கப்பட்டன.

மேலும், விற்பனையாளர்களுக்கு சுகாதார விதிமுறைகள், உணவு பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் சுத்தமான சூழல் பராமரிப்பு குறித்து தேவையான ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்கள்  பொதுச் சுகாதார பரிசோதகர்களினால் வழங்கப்பட்டன.

பொதுமக்களின் ஆரோக்கியத்தை பாதுகாப்பது  முக்கியப் பொறுப்பாக இருப்பதால்  இத்தகைய பரிசோதனைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என்பதை சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

மேற்குறித்த பரிசோதனைகள் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சஹிலா இஸ்ஸதீன்  வழிகாட்டலின்பேரில்  சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜே.மதனின் முன்னோடித் திட்டமிடல் மற்றும் ஆலோசனைக்கமைய மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1074999

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time