சட்டவிரோதமாக வடிகானை உடைத்து; கழிவுநீரை அனுப்ப வைத்திருந்த 5 இரும்புக் குழாய்கள் – காத்தான்குடி பொலிஸாரினால் பறிமுதல்.!!!
(ஜே.கே)
காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதிய காத்தான்குடி மத்திய வீதியில், புதிதாக கட்டப்பட்ட வடிகானை வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அனுமதியின்றி இரவோடு இரவாக சட்டவிரோதமாக உடைத்து, கழிவுநீரை அனுப்ப இரும்புக் குழாயை பொருத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், பிரதேச மக்களின் தகவலின் அடிப்படையில் பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து பொருத்துவதற்கு தயாராக வைக்கப்பட்டிருந்த 19 அடி நீளமான 5 இரும்புக்குழாய்களைக் கைப்பற்றினர்.
பொலிஸார் வந்ததும், சம்பந்தப்பட்டவர்கள் முயற்சியை இடைநிறுத்தி விட்டுச் சென்றனர்.
முறையான அனுமதி இன்றி சட்டவிரோதமாக வடிகானை உடைத்து, கழிவுநீர் அனுப்ப பொருத்தத் திட்டமிட்டு வைத்திருந்த 5 இரும்புக் குழாய்களையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
சம்பவம் நேற்று இரவு (08) சுமார் 11.00 மணியளவில் இடம்பெற்றது.
குறித்த இரும்புக் குழாய்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.




