உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

March 25, 2026

Hot News

Print
மக்கள் ஒத்துழைப்பே பாதுகாப்பின் அடித்தளம்.!!!
15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!

Share :

சவூதி தூதுவராலயத்தின் ஏற்பாட்டில் 5000 பேருக்கு இப்தார் நிகழ்வு.!!!

(ரீ.எல்.ஜவ்பர்கான்)

சவவூதி அரேபிய இஸ்லாமிய விவகார அமைச்சின் அனுசரணையுடன் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் இப்தார் நிகழ்வு காத்தான்குடி மஸ்ஜிதுஸ் ஸுன்னா பள்ளிவாயலில் வெகு சிறப்பாக இடம் பெற்றது.

சவூதியரேபிய மன்னரான இருஹரம்களின் சேவகர் ஸல்மான் பின் அப்துல் அஸீஸ் மற்றும் இளவரசர் முஹம்மது பின் சல்மான் ஹபிழஹுமுல்லாஹ் அவர்களின் தனிப்பட்ட நிதிப் பங்களிப்பில் உலகெங்கிலும் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் மேற்படி இப்தார் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் இலங்கையில் பல்வேறு பகுதிகளிலும் சுமார் 5000 நோன்பாளிகளுக்கான இப்தார் – நோன்பு திறக்கும் ஏற்பாடுகளை இலங்கைக்கான சவூதி தூதுவர் காலித் பின் ஹமூத் அல் கஹ்தானி அவர்கள் ஏற்பாடு செய்துள்ளார்.

காத்தான்குடி மஸ்ஜிதுஸ் ஸுன்னா பள்ளிவாயலில் இடம்பெற்ற இவ் இப்தார் நிகழ்வில் மஃஹதுஸ் ஸுன்னா அந் நபவிய்யா அரபுக் கல்லூரியின் மாணவிகள் ஆசிரியர்கள், முக்கிய உலமாக்களும் மற்றும் மஹல்லாவாசிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

விஷேட மார்க்க சொற்பொழிவுடன் ஆரம்பமான மேற்படி இப்தார் நிகழ்வில் 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 718869

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time