உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!
IMG-20260301-WA0055
வளைகுடா போரும்: அழிவை நோக்கிய நகர்வுகளும்.!!!

பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்: ஆசிரியர் சேவையில் இணைக்க ஜனாதிபதி ஒப்புதல்.!!!

ஜனாதிபதி அனுர் குமார திசாநாயக்க அவர்களின் அழைப்பின் பேரில், பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்க பிரதிநிதிகள் மற்றும் ஜனாதிபதியுடன் இன்று (03) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் முக்கிய சந்திப்பு நடைபெற்றது.

இந்த சந்திப்பில், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எதிர்கொள்ளும் தொழில்சார் மற்றும் சமூகப் பிரச்சினைகள் பற்றிய விரிவான கலந்துரையாடல்கள் நடந்தன. பாடசாலைகளில் பணியாற்றிய அனுபவம் கொண்ட பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் சேர்ப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என ஜனாதிபதி தெரிவித்தார்.

அவரது அறிவிப்பின்படி, அனைத்து உத்தியோகத்தர்களின் கௌரவத்தையும் அந்தஸ்தையும் பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதி செய்யப்பட்டது. மேலும், ஆசிரியர் சேவைப் பிரமாணக் குறிப்பிற்கு ஏற்ப நடத்தப்படும் போட்டிப் பரீட்சைகளுக்கு உத்தியோகத்தர்கள் தயாராக இருக்க வேண்டுமென அவர் அழைப்பு விடுத்தார்.

இந்த நிகழ்வில் ஜனாதிபதி செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 703749

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time