சில மாவட்டங்களில் கடும் மின்னல் தாக்கம்: பொதுமக்கள் முன்னெச்சரிக்கை.!!!
மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் கடும் மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று புதன்கிழமை (04) நண்பகல் வெளியிட்ட எச்சரிக்கையில் தெரிவித்துள்ளது.
இதன்படி, இந்த எச்சரிக்கை இன்று இரவு 11.00 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிக்கையில், மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் கடுமையான மின்னல் மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
மின்னல் மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதனால், மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க பொதுமக்கள் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்குமாறு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.