உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

March 24, 2026

Hot News

Print
மக்கள் ஒத்துழைப்பே பாதுகாப்பின் அடித்தளம்.!!!
15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!

Share :

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவாளர்கள் தேசிய மக்கள் சக்தியுடன் இணைவு.!!!

மண்முனை பற்று பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரும் மண்முனை பற்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அமைப்பாளருமான ஜனாப் A மதீன் தலைமையிலான ஆதரவாளர்கள் மற்றும் முக்கிய செயற்பாட்டாளர்கள் தேசிய மக்கள் சசக்தியில் நேற்று (22) இணைந்து கொண்டனர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மண்முனை பற்று அமைப்பாளர் ஜனாப் A.மதீன் தலைமையில் காங்கேயனோடை கிராம அபிவிருத்தி அமைப்பு சங்க மண்டபத்தில் மேற்படி வைபவம் இடம்பெற்றது.

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மண்முனை பற்றில் அரசாங்கத்தை பலப்படுத்தி உள்ளூராட்சி மன்ற அதிகாரத்தை பெற்றுக் கொள்ளும் நோக்கில் இந்த இணைவு நடைபெற்றது சிறப்பம்சமாகும்.

மேற்படி வைபவத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் அவர்களின் இணைப்புச் செயலாளர் ஜனாப். எம். அப்துல்லா . கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் யூ எல் எம் என் முபீன் தேசிய மக்கள் சக்தியின் மாவட்ட குழு உறுப்பினர் எஸ் எம் ஏ. நசீர் காத்தான்குடி நகர சபை தேசிய மக்கள் சக்தி வேட்பாளர்களான பொறியியலாளர் பழுலுல் ஹக், எம். நஜிம் மற்றும் எம்‌ எம். றம்ஸி உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.

எதிர்காலத்தில் மண்முனை பற்று பிரதேசம் சார்ந்து எடுக்கப்பட வேண்டிய பல்வேறு வேலை திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது இங்கு முக்கிய அம்சமாகும்‌.

ஊடகப் பிரிவு

தேசிய மக்கள் சக்தி

காத்தான்குடி

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 718667

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time