உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

March 25, 2026

Hot News

Print
மக்கள் ஒத்துழைப்பே பாதுகாப்பின் அடித்தளம்.!!!
15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!

Share :

மட்டு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரை நாளை மக்கள் சந்திக்கலாம்.!!!

வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட்டு பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடராக இடம்பெறுவதனால் மக்களுக்கும் அவர்களது பிரதிநிதியாக எனக்குமான தொடர்பாடல் மிகவும் நெருக்கடி நிறைந்த ஒன்றாக காணப்படுகிறது – கொழும்பில் தொடர்ச்சியாக இருக்கும் நிலை காரணமாக சிலர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அவர்களது அலுவல்களை நிறைவேற்றிக் கொண்டாலும் பலரது தொடர்பாடல் தவற விடப்பட்ட ஒன்றாக இருப்பது பெரும் கவலையே !

அந்த வகையில் இக்காலப்பகுதியில் ஞாயிற்றுகிழமை மாத்திரம் பாராளுமன்ற அமர்வுகளுக்கு விடுமுறை என்று இருந்தாலும் , சேவை நாடும் பல மக்களது பணிகள் அரச திணைக்களங்களை மையப்படுத்தி இருப்பதனால் இவ்வாறான மக்கள் சந்திப்பினை விடுமுறை நாளில் நடாத்துவது என்பது எந்த வகையிலும் பொருத்தம் அற்ற ஒன்று –
ஞாயிறு எனக்கான விடுமுறை என்பதற்காக தேவை நாடும் மக்களை வெறுமனே கண் துடைப்பை செய்வதற்காக அலைய செய்ய முடியாது ,

எம்மை நாடி வரும் அவர்களது அலுவலக நடைமுறை சார் தேவையினை நிறைவேற்றிட மனசாட்சியுடன் முயற்சிக்கும் பொறுப்பை சுமந்தவன் எனும் அடிப்படையில் வாரநாள் ஒன்றே பொருத்தம் என்பதால்
எமது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைமை கௌரவ அல்ஹாஜ் ரவூப் ஹக்கீம் (MP) அவர்களின் விசேட வழிகாட்டல் மற்றும் அனுமதியுடன் நாளை திங்கட்கிழமை ஏறாவூர் Dr. அஹமத் பரீத் வித்தியாலயம் அருகில்- NCC கட்டடத்தில் அமைந்துள்ள எனது அரசியல் பணிமனையில் (03.03-திங்கட்கிழமை) காலை 9.30 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை மக்கள் சந்திப்பை மேற்கொள்ள உள்ளேன் .

ஆகவே குறித்த நேரத்தில் ஒரு மக்கள் பிரதிநிதியாக என்னை சந்திக்க ஏதேனும் நிருவாக , நிறுவன ரீதியான அவசிய தேவை மிக்கவர்கள் மாத்திரம் இந்த நேரத்தை பயன்படுத்தி வினைத்திறன் மிக்க மக்கள் பணிக்கான ஒத்துழைப்பை நல்குமாறு மிகவும் தாழ்மையுடன் வேண்டிக் கொள்கிறேன் –

நன்றியுடன்
என்றும் மக்கள் பணியில் ..

MS . நளீம்
பாராளுமன்ற உறுப்பினர்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 718940

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time