உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!
IMG-20260301-WA0055
வளைகுடா போரும்: அழிவை நோக்கிய நகர்வுகளும்.!!!

புதுடில்லியில் நடைபெறும் 28வது பொதுநலவாய சபாநாயகர்கள் மாநாட்டில்: இலங்கைப் பாராளுமன்றக் குழு பங்கேற்பு.!!!

இந்தியாவின் புதுடில்லியில் 2026 ஜனவரி 14ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை நடைபெறும் 28வது பொதுநலவாய சபாநாயகர்கள் மற்றும் தலைமை தாங்கும் அதிகாரிகளின் மாநாட்டில் பங்கேற்பதற்காக, கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தலைமையிலான இலங்கைப் பாராளுமன்றக் குழுவினர் நேற்று முன்தினம் (13) காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து இந்தியா நோக்கிப் புறப்பட்டனர். இந்தியப் பாராளுமன்றத்தினால் வழங்கப்பட்ட அழைப்பின் பேரிலேயே இக்குழுவினர் மாநாட்டில் பங்கேற்கின்றனர்.

இந்திய மக்களவையின் (லோக் சபா) கௌரவ சபாநாயகர் ஸ்ரீ ஓம் பிர்லா தலைமையில் நடைபெறும் இம்மாநாட்டில், நான்கு பகுதியளவு தன்னாட்சியான பாராளுமன்றங்கள் உட்பட 42 பொதுநலவாய நாடுகளைச் சேர்ந்த 61 சபாநாயகர்கள் மற்றும் தலைமை தாங்கும் அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

மாநாட்டின் போது, ஜனநாயக நிறுவனங்களை வலுப்படுத்துவதில் சபாநாயகர்களின் பங்கு, பாராளுமன்ற பணிகளில் செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாடு, மக்கள் பிரதிநிதிகள் மீது சமூக ஊடகங்களின் தாக்கம், பாராளுமன்றத்துடன் பொதுமக்களின் இணைப்பை மேம்படுத்தும் அணுகுமுறைகள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பு, சுகாதாரம், நல்வாழ்வு உள்ளிட்ட முக்கிய விடயங்கள் குறித்து விரிவான கலந்துரையாடல்கள் நடைபெறவுள்ளன.

இந்த மாநாட்டில் பங்கேற்கும் இலங்கைத் தூதுக் குழுவில்,

கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன,

பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர,

இலங்கை பாராளுமன்றத்தின் நிர்வாக உதவிப் பணிப்பாளர் காஞ்சன ருசித ஹேரத்

ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். புதுடில்லி விமான நிலையத்தில் இந்தியப் பாராளுமன்ற உறுப்பினர் பிரவீன் கண்டேல்வால் அவர்கள் இலங்கைத் தூதுக் குழுவினரை அன்புடன் வரவேற்றார்.

மாநாட்டின் ஓரமாக, கௌரவ சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன அவர்கள், இந்திய மக்களவையின் கௌரவ சபாநாயகர் ஸ்ரீ ஓம் பிர்லா, ஐக்கிய இராச்சிய பாராளுமன்றத்தின் கௌரவ சபாநாயகர் சேர் லிண்ட்சே ஹோய்ல், கனடா பாராளுமன்றத்தின் கௌரவ சபாநாயகர் பிரான்சிஸ் ஸ்கார்பாக்லியா, அவுஸ்திரேலிய பிரதிநிதிகள் சபையின் கௌரவ சபாநாயகர் மில்டன் டிக் உள்ளிட்ட தலைமை தாங்கும் அதிகாரிகளுடன் இருதரப்புக் கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டில் இலங்கை பங்கேற்பது, உலகளாவிய பாராளுமன்ற சமூகத்தில் ஜனநாயகத்தை வலுப்படுத்தவும், சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்தவும் இலங்கை மேற்கொண்டு வரும் தீவிர முயற்சிகளின் வெளிப்பாடாகக் கருதப்படுகிறது. அதேபோல், பொதுநலவாயக் கொள்கைகள் மற்றும் மதிப்புகளுக்கான இலங்கையின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பையும் இது பிரதிபலிக்கிறது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 703706

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time