இலங்கையின் முதலாவது நீதிபதித் தம்பதியினர்.!!!
மட்டக்களப்பு மாவட்டத்தின் முதலாவது முஸ்லிம் பெண் நீதிபதியானார் மௌலவியா திருமதி முஹம்மது முஸ்தபா பாத்திமா ஸிஹாரா
காத்தான்குடியைச் சேர்ந்த இவர் AB. முஹம்மது முஸ்தபா (அமானா மில் பொலன்னறுவை) MI. உம்முல் ஹைர் தம்பதியினரின் கனிஷ்ட புதல்வியும்: MLM.அப்துல் சமத், ML.உம்மு சல்மா ஆகியோரின் மருமகளும்: கௌரவ மாவட்ட நீதிபதி (மொனராகலை) AS.ஹிபதுல்லாஹ் அவர்களது அன்புக்குரிய பாரியரும் ஆவார். இரண்டு சகோதரிகள் ஒரு சகோதரருடன் பிறந்த இவர் பல்துறை ஆற்றல்மிக்க பண்புள்ளவரும் மூன்று பிள்ளைகளின் தாயும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவர் பேராதனை பல்கலைக்கழகத்தின் சட்டமாணி சிறப்பு பட்டத்தினையும் இலங்கை சட்டக் கல்லூரி இறுதி பரீட்சையில் சிறப்பு தேர்ச்சியும் பெற்று 2015ல் இலங்கை உயர்நீதிமன்ற சட்டத்தரணியாக பதவிப்பிரமாணம் செய்தார்.
அதனைத் தொடர்ந்து சட்ட முதுமாணி Master of law in criminal justice administration (LLM- OUSL), Masters in labour relation and human resource management(MLRHRM-UO Colombo ), Diploma in Forensic Medicine DFMS-UO.Pera), Higher National diploma in Information Technology (HNDIT), Diploma in Sinhala (UO.Kelaniya) என தனது மேற்படிப்பினை பூர்த்தி செய்தார்.
மட்டக்களப்பு மாவட்ட தொழில் அலுவலகத்தில் சேவையாற்றி வந்த நிலையில் இலங்கை நீதிச்சேவை ஆணைக்குழுவினால் இவ்வருடம் நடாத்தப்பட்ட போட்டி பரீட்சையிலும் நேர்முகப் பரீட்சையின் தேர்விலும் சித்தியடைந்து மட்டக்களப்பு மாவட்டத்தின் முதலாவது முஸ்லிம் பெண் நீதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் இலங்கையின் முதலாவது முஸ்லிம் நீதிபதி தம்பதியினர் என்று மகுடத்தை தன்வசம் பெற்றுக் கொண்டனர்.