உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

August 19, 2025

Hot News

இலங்கையில் நடந்த அதிசயம்: 20 வருடங்களுக்குப் பிறகு, ஊருக்குள் முதல் முறையாக வந்த – குப்பை வண்டி.!!!

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

புத்தளம் நாகவில்லு பகுதியில் அமைந்துள்ள ரசூல் நகர் கிராமத்திற்கு முதல் முறையாக வெள்ளிக்கிழமை (15) குப்பை வண்டி ஊருக்குள் வந்து குப்பைகளை சேகரித்து சென்றுள்ளது.

ரசூல் நகர் கிராமம் உருவாகி சுமார் 20 வருடங்கள் கழிந்துள்ள நிலையில், ஊருக்குள் முதல் முறையாக குப்பை வண்டி வந்து குப்பைகளை சேகரித்த விடயம் அப்பகுதி மக்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ரசூல் நகர் கிராம பள்ளிவாசல் நிர்வாகம் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ரசூல் நகர் இணைப்பாளர் அலி அஸீம் ஆகியோர், புத்தளம் பிரதேச சபை பொத்துவில்லு வட்டார உறுப்பினரும், புத்தளம் பிரதேச சபை அபிவிருத்திக்குழு தலைவருமான ஷாஹீன் ரீஸாவிடம் முன்வைத்த வேண்டுகோளுக்கிணங்க, ரசூல் நகர் கிராமத்துக்கு வெள்ளிக்கிழமை (15) குப்பை வண்டி வந்து குப்பைகளை சேகரித்து சென்றுள்ளது.

ஊரின் நீண்ட கால பிரச்சினையாக இருந்த குப்பை கழிவு விடயத்திற்கு வெள்ளிக்கிழமை (15) உரிய தீர்வு கிடைத்துள்ளதாகவும், இதனை மிக விரைவாகவும், நேர்த்தியாகவும் பெற்றுத்தந்த பொத்துவில்லு வட்டார உறுப்பினர் ஷாஹீன் ரீஸாவிற்கு தமது மனப்பூர்வமான நன்றிகளை தெரிவிப்பதாகவும் ஊர் மக்கள் தெரிவித்துள்ளனர்.

புத்தளம் பிரதேச சபைக்கு சொந்தமான குறித்த குப்பை வண்டி சுழட்சி முறையில் ரசூல் நகர் கிராமத்துக்கு தொடர்ச்சியாக வருகை தரும் எனவும் ரசூல் நகர் கிராம மக்களினால் ஊரின் ஏனைய அத்தியாவசிய குறைபாடுகள் குறித்து தம்மிடம் வைக்கப்பட்ட வேண்டுகோள் படிப்படியாக பூர்த்திசெய்யப்படும் எனவும் புத்தளம் பிரதேச சபை அபிவிருத்திக்குழு தலைவர் ஷாஹீன் ரீஸா தெரிவித்துள்ளார்.

ரசூல் நகர் கிராமத்திற்கு வெள்ளிக்கிழமை (15) தினம் வருகை தந்த குப்பை வண்டி அலி அஸீமின் வழிகாட்டலின் கீழ் குப்பைகள் சேகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

Related News

Total Websites Views

Total Views: 322912

Search

விளம்பரங்கள்