வாகன முன் கண்ணாடிகளில்; பதவி மற்றும் பெயர்ப் பலகைகள் காட்சிப்படுத்துவது குறித்து – காவல்துறை கடும் நடவடிக்கை.!!!
வாகனங்களின் முன் கண்ணாடிகளில் பதவிகள் மற்றும் பெயர்ப் பலகைகளை காட்சிப்படுத்துவது தொடர்பான விதி கடுமையாக அமுல்படுத்தப்படும் என்று காவல்துறை போக்குவரத்து மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளர், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் (SSP) மனோஜ் ரணகல தெரிவித்தார்.
தொலைக்காட்சி விவாதமொன்றில் கலந்துகொண்டு பேசிய SSP ரணகல, சூரிய ஒளியில் இருந்து பாதுகாப்பதற்காக வாகனத்தின் முன் கண்ணாடியின் ஐந்தில் ஒரு பங்கு பகுதியை மாத்திரம் கறுப்பாக்கம் (tint) செய்ய முடியும் எனவும், அதைத் தவிர, வருமான அனுமதிப்பத்திரத்தை மாத்திரமே காட்சிப்படுத்த முடியும் என்றும் விளக்கமளித்தார்.
அரசாங்க அதிகாரிகள் மற்றும் ஏனையோர் தமது பதவிகளை முன் கண்ணாடிகளில் காட்சிப்படுத்துவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, சட்டம் அனைவருக்கும் சமமாகப் பொருந்தும் என்றும், சட்டத்தை மீறுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் வலியுறுத்தினார்.