உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

May 17, 2026

Hot News

IMG-20260510-WA0104
ஈராக் மண்ணில் இஸ்ரேலின் ரகசிய ராணுவத் தளம்: மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிப்பு.!!!
IMG-20260503-WA0077
வன்முறை கலாச்சாரம் அரசியலில்: வெற்றியா அல்லது தோல்வியா.???

Share :

வாகன முன் கண்ணாடிகளில்; பதவி மற்றும் பெயர்ப் பலகைகள் காட்சிப்படுத்துவது குறித்து – காவல்துறை கடும் நடவடிக்கை.!!!

வாகனங்களின் முன் கண்ணாடிகளில் பதவிகள் மற்றும் பெயர்ப் பலகைகளை காட்சிப்படுத்துவது தொடர்பான விதி கடுமையாக அமுல்படுத்தப்படும் என்று காவல்துறை போக்குவரத்து மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளர், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் (SSP) மனோஜ் ரணகல தெரிவித்தார்.

​தொலைக்காட்சி விவாதமொன்றில் கலந்துகொண்டு பேசிய SSP ரணகல, சூரிய ஒளியில் இருந்து பாதுகாப்பதற்காக வாகனத்தின் முன் கண்ணாடியின் ஐந்தில் ஒரு பங்கு பகுதியை மாத்திரம் கறுப்பாக்கம் (tint) செய்ய முடியும் எனவும், அதைத் தவிர, வருமான அனுமதிப்பத்திரத்தை மாத்திரமே காட்சிப்படுத்த முடியும் என்றும் விளக்கமளித்தார்.

​அரசாங்க அதிகாரிகள் மற்றும் ஏனையோர் தமது பதவிகளை முன் கண்ணாடிகளில் காட்சிப்படுத்துவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, சட்டம் அனைவருக்கும் சமமாகப் பொருந்தும் என்றும், சட்டத்தை மீறுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 817913

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time