உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

Print
மக்கள் ஒத்துழைப்பே பாதுகாப்பின் அடித்தளம்.!!!
15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!

ஏறாவூரில் இரு குழுக்களுக்கிடையில் வாள்வெட்டு: இருவர் படுகாயம்.!!!

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏறாவூர் முதலாம் பிரிவு, இளையவன் வீதியில் நேற்று (23) இரவு இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இரு இளைஞர்கள் கடுமையாக காயமடைந்துள்ளனர்.

பொலிஸார் தெரிவித்ததாவது, சம்பவத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச்சம்பவத்திற்கான காரணமாக, இரு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற கண்காட்சியின் போது இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்தர்க்கம் பின்னணியாக இருந்ததாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

நேற்று இரவு சுமார் 9.00 மணியளவில், ஒரு குழுவினர் மற்றொரு குழுவினரை வீடு தேடி சென்று வாளால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் இரு இளைஞர்கள் தீவிர காயமடைந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 716827

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time