உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

தனியார் ஆடை தொழிற்சாலை பஸ் ஏறி; மூன்று வயது சிறுவன் பரிதாபகரமான முறையில் பலி – மட்டக்களப்பு ஆரையம்பதியில் சம்பவம்.!!! 

(ஜே.கே)

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதியில் அமைந்துள்ள பிரபல தனியார் ஆடை தொழிற்சாலை ஒன்றுக்கு சொந்தமான பஸ்ஸின் பின் பக்க சில்லுக்குள் சிக்கி மூன்று வயது சிறுவன் பரிதாபகரமான முறையில் பலியான சம்பவம் இன்று (30) மாலை இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர் .

குறித்த ஆடை தொழிற்சாலைக்கு முன்னால் நிறுத்தப்பட்டிருந்த பஸ் வண்டியின் சில்லுக்குள் சிக்கிய குறித்த சிறுவன் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த ஆடைத் தொழிற்சாலையில் பணி புரியும் தனது தாயுடன் வருகை தந்த மேற்படி சிறுவன் ஆடைத் தொழிற்சாலைக்குள் தாய் சென்றபோது பின்னால் வந்த சிறுவனின் மீது குறித்த பஸ் வண்டி டயர் ஏறி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக சிறுவன் ஸ்தலத்திலேயே பலியானதாக தெரிவருகிறது .

காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். சிறுவனின் சடலம் ஆரையம்பதி பிரதேச வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Related News

Total Websites Views

Total Views: 235774

Search

விளம்பரங்கள்