2026 ரமழான் மாதத்திற்காக இறக்குமதி செய்யப்படும் பேரித்தப்பழங்களுக்கு வரிச் சலுகை – அரசாங்கத்தின் முக்கிய அறிவிப்பு.!!!
2026 ஆம் ஆண்டு ரமழான் மாதத்தில் முஸ்லிம்களுக்கு இலவசமாக விநியோகிப்பதற்காக வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பேரித்தப்பழங்களுக்கு வரிச் சலுகை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள பள்ளிவாசல்கள், அரபுக் கல்லூரிகள், Trust நிறுவனங்கள் அல்லது அரச நிறுவனங்களில் பதிவு செய்யப்பட்ட சமூக சேவக அமைப்புகள் ஆகியவற்றின் பெயரில் நன்கொடையாக பெறப்பட்டு இறக்குமதி செய்யப்படும் பேரித்தப்பழங்களுக்கு, 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் பிரிவு 2 (உப பிரிவு 3) இன் ஏற்பாடுகளின் கீழ்,
2026 ஜனவரி 01 முதல் 2026 மார்ச் 20 வரை மட்டுமே இவ்வரிச் சலுகை வழங்கப்படும்.
தேவையான ஆவணங்கள்
வரிச் சலுகைக்கான சிபாரிசை பெற, கீழ்க்காணும் விடயங்களை அவதானித்து தேவையான சகல ஆவணங்களையும் திணைக்களத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பேரித்தப்பழங்களுக்கான Bill of Lading இன் பிரதி.
Bill of Lading இல் Consignee ஆக, திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட பள்ளிவாசல் / அரபுக் கல்லூரி / Trust அல்லது அரசத்தில் பதிவு செய்யப்பட்ட சமூக சேவக நிறுவனத்தின் பெயர் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.
சமூக சேவக நிறுவனங்களின் பெயரில் கொண்டுவரப்படும் பேரித்தப்பழங்களுக்கு சத்தியக்கடதாசி (Affidavit) சமர்ப்பிக்கப்பட வேண்டும். அதில் இலவசமாக பெற்ற பேரித்தப்பழங்களை ஜமாத்தினருக்கு இலவசமாக வழங்குவதாக உறுதிப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.
– சமூக சேவக நிறுவனத்தின் பதிவுச் சான்றிதழ் பிரதி இணைக்கப்பட வேண்டும்.
தனிநபர் அல்லது நிறுவனத்தின் பெயர் காணப்பட்டால், அந்த பேரித்தப்பழங்களை பதிவு செய்யப்பட்ட பள்ளிவாசலுக்கு வழங்கி, அதன் மூலம் ஜமாத்தினருக்கு நன்கொடையாக வழங்குவதை உறுதிப்படுத்தும் கடிதம்.
தனிநபர் / நிறுவனத்தினால் பள்ளிவாசலுக்கு நன்கொடையாக வழங்கப்படும் பேரித்தப்பழங்களை ஜமாத்தினருக்கு விநியோகிப்பதை பள்ளிவாசல் தலைவர் அல்லது செயலாளர் உறுதிப்படுத்தும் கடிதம்.
2025 ஆம் ஆண்டில் இவ்வரிச்சலுகையின் கீழ் பேரித்தப்பழங்களை இறக்குமதி செய்திருந்தால், பெற்றுக்கொண்டவர்களின் கையொப்பங்களுடன் கூடிய விபரங்கள்.
Bill of Lading இல் பேரித்தப்பழங்களுடன் வேறு பொருட்கள் காணப்பட்டால், சிபாரிசுக் கடிதம் வழங்கப்படமாட்டாது.
Bill of Lading இல் பேரித்தப்பழத்தின் அளவு கிலோகிராமில் குறிப்பிடப்படவில்லை எனின், திணைக்களத்திற்கு சமர்ப்பிக்கும் கடிதத்தில் அவ்வளவு குறிப்பிடப்பட வேண்டும்.
Bill of Lading இல் “பேரித்தப்பழம்” எனத் தெளிவாக குறிப்பிடப்படவில்லை எனின் Affidavit சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
பள்ளிவாசல் மூலம் பேரித்தப்பழங்கள் விநியோகிக்கப்படும் நபர்கள் மற்றும் அளவுகள் குறிப்பிடப்பட்ட ஆவணம்.
ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நியமிக்கப்பட்ட கள உத்தியோகத்தர்களின் சிபாரிசுக் கடிதம்.
– அவர்களின் கண்காணிப்பில் விநியோகம் நடைபெறுவதையும், பெறுபவர்களின் பெயர் மற்றும் கையொப்பங்களுடன் மூலப் பிரதி திணைக்களத்திற்கு சமர்ப்பிக்கப்படுவதையும் உறுதிப்படுத்த வேண்டும்.
திணைக்களம் வழங்கும் ஒப்பந்தப் படிவத்தில் பள்ளிவாசல் தலைவர் / செயலாளர் / பொருளாளர் கையொப்பம் மற்றும் கைநாட்டு இடல் வேண்டும் (பதவி உறுதிப்படுத்தும் ஆவணத்துடன்).
– அல்லது அதிகாரம் வழங்கப்பட்ட நம்பிக்கையாளர் கையொப்பமிடலாம்.
– மேலும் இரு சாட்சிகள் கையொப்பமிட வேண்டும்; அவர்களில் ஒருவர் Consignee ஆக இருக்க வேண்டும்.
மேற்கண்ட அனைவரின் அடையாள அட்டைப் பிரதிகள்.
மேற்கண்ட சகல ஆவணங்களும் திணைக்களத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, அவை பரிசீலிக்கப்பட்ட பின்னரே திணைக்களத்தின் சிபாரிசுக் கடிதம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அக்கடிதத்தின் அடிப்படையில் புத்தசாசன, மத மற்றும் கலாச்சார அமைச்சின் கடிதம் பெற்று, சுங்கத் திணைக்களத்தில் 1 ரூபாய் வரி செலுத்தி பேரித்தப்பழங்களை விடுவித்துக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எம்.எஸ்.எம். நவாஸ்
பணிப்பாளர்
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம்