உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

March 15, 2026

Hot News

IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!
IMG-20260301-WA0055
வளைகுடா போரும்: அழிவை நோக்கிய நகர்வுகளும்.!!!

மூன்று வயது சிறுவன்;  பாழடைந்த ஆழமான நீர் குழியில் இருந்து சடலமாக மீட்பு.!!!

சம்மாந்துறையில் நேற்று (22) பிற்பகல் 5:40pm அளவில் உடங்கா -02 பௌஸ் மாவத்தை வீதியில் மூன்று வயது ஆண் பிள்ளை பாழடைந்த ஆழமான நீர் குழியிலிருந்து மரணமடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது

3 மணித்தியாலமாக பிள்ளையை தேடிய பொதுமக்களும் பெற்றோரும் அந்த மரணமடைந்த பிள்ளையின் வீட்டுக்கு அருகில் உள்ள மிக ஆழமான பாழடைந்த நீர்க்குழிக்குள் இருந்து மரணமடைந்த நிலையில் மீட்டுள்ளனர்

இனம் தெரியாத ஒரு ஆண் இளைஞரினால் இந்தப் பிள்ளையை அழைத்துச் செல்லும் காட்சி அருகில் உள்ள CCTV காணொளி பதிவில் பிள்ளை கண்டெடுப்பதற்கு 3 மணித்தியாலங்களுக்கு முன்பு பதிவாகியுள்ளது

அழைத்து செல்லும் காட்சி மட்டுமே CCTV கேமராவில் பதிவாகியுள்ளது.. ஆனால் யார் என்பதை அடையாளம் காண முடியாமல் உள்ளது.

ஆனால் குழிக்குள் எப்படி மரணமடைந்தார் என்பது தெரியவில்லை..

பொதுமக்கள் பொலிஸார் உடன் இணைந்து தேடுதல் மேற்கொண்ட போதே இவ்வாறு கண்டெடுக்கப்பட்டது.

மரணம் அடைந்த ஜனாஸா தற்போது சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி KD.ஜெயலத் தலைமையில் மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 703501

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time