உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!
IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!

3 மில்லியன் ரூபாய் செலவில்: காத்தான்குடி வாவிக்கரை வீதி; அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் – இன்று ஆரம்பம்.!!!

(ஜே.கே)

ஆளும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வரும் கிராமிய வீதிகள் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாண சபையின் மூன்று மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின்கீழ் முன்னெடுக்கப்படவுள்ள வாவிக்கரை வீதி அபிவிருத்தி திட்டத்திற்கான ஆரம்ப வேலைகள் இன்று (29) காலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இத்திட்டத்துக்கான ஆரம்ப வேலைகள் இன்று  காலை தேசிய மக்கள் சக்தி காத்தான்குடி அமைப்பாளரும் மாவட்ட கடற்தொழில் அமைச்சின் இணைப்பாளருமான எஸ்.எம்.நசீர் தலைமையில் இடம்பெற்றதுடன், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

கிழக்கு மாகாண ஆளுனரின் இணைப்புச் செயலாளர்  யூ.கே.எம். அப்துல்லாஹ், தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் எம்.பி.எம். பிர்தௌஸ் நளீமி, விவசாயம், கால்நடை, காணி, நீர்ப்பாசண அமைச்சின் மாவட்ட இணைப்பாளர் திலகநாதன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்

காத்தான்குடி வாவிப் பிரதேசம் இன்று பல சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈரரத்த பிரதேசமாக மாறி வருகிறது. இவற்றை முழுமையாக அபிவிருத்தி செய்து கிழக்கு மாகாணத்தின் மிகப்பெரிய சுற்றுலாத்தளமாக மாற்றும் நடவடிக்கைகளை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 713958

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time