உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

March 24, 2026

Hot News

Print
மக்கள் ஒத்துழைப்பே பாதுகாப்பின் அடித்தளம்.!!!
15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!

Share :

மலசல கூடத்தில் உணவு தயாரித்து விற்பனை; உரிமையாளருக்கு சிறை.!!!

மட்டக்களப்பு செங்கலடி பொது சுகாதாரப் பிரிவிலுள்ள உணவகம் ஒன்றில் மலசல கூகூடத்தில்உணவு தயாரித்து விற்பனை செய்த உரிமையாளருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பிரதேசத்திலுள்ள உணவகங்களை நேற்று (24) பொது சுகாதார பரிசோதகர்கள், சுகாதார வைத்திய அதிகாரிகள் முற்றுகையிட்டு சோதனை நடவடிக்கையினை முன்னெடுத்தனர்.

சோதனை நடவடிக்கையில் ஒரு உணவகத்தில் மலசல கூடத்தில் உணவு தயாரித்து விற்பனை செய்து வந்ததை கண்டுபிடித்து அந்த உணவக உரிமையாளரை கைது செய்தனர்.

இதனையடுத்து குறித்த உணவக உரிமையாளர் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப்பட்டதையடுத்து அவரை ஒரு மாதகாலம் சிறையில் அடைக்குமாறும் 60 ஆயிரம் ரூபாவை அபராதமாக செலுத்துமாறும் நீதவான் உத்தரவிட்டார்.

அதேவேளை கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு அருகில் வீதி ஓரத்தில் கொல்கலனில் அமைக்கப்பட்டுள்ள இரு உணவகத்தில் மனித பாவனைக்கு பொருத்தமற்ற உணவுகளை விற்பனை செய்த இரு கடைகளுக்கு தலா 10 ஆயிரம் ரூபா வீதம் 20 ஆயிரம் ரூபா அபதாரமாக செலுத்த நீதவான் உத்தரவிட்டார்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 718667

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time