காத்தான்குடி பிரதேசத்தில் – சுனாமி ஒத்திகை நிகழ்வு.!!!
(ஜே.கே)
“உலக சுனாமி பேரிடர் விழிப்புணர்வு தினத்துடன்” இணைந்து இந்தியப் பெருங்கடல் சுனாமி முன் தயாரிப்பு பயிற்சி குறித்து விழிப்புணர்வுகள் அண்மையில் இடம்பெற்றன.
இதற்கமைவாக சுனாமி எச்சரிக்கை ஒத்திகை மட்டக்களப்பு மாவட்டம் உட்பட நாட்டின் 5 மாவட்டங்களில் இடம்பெறுகின்றன.
இதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான சுனாமி ஒத்திகை காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவின் 167C கிராம சேவகர் பிரிவிலும், மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவிலும் இன்று (05) புதன்கிழமை காலை 8.30 மணிக்கு இடம்பெற்றது.
இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் பிரதேச செயலகங்கள் என்பன இணைந்து நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
சுனாமி எச்சரிக்கை குழுமத்தில் எச்சரிக்கை மணி ஒலிக்கப்பட்டதையடுத்து சுனாமி ஒத்திகை நிகழ்வுகள் இடம் பெற்றன.



















