தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் 107 மில்லியன் செலவில் 25 வருடங்களாக திருத்தப்படாத வீதி புனரமைப்பு; நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் நேரடி விஜயம்.!!!
( ஜே.கே)
ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க வின் வழிகாட்டலில் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சரின் நேரடி கண்காணிப்பின் கீழ் காத்தான்குடி நகரசபை பிரிவில் சுமார் 25 வருடங்களாக குன்றும் குழியுமாக மிக மோசமான நிலையில் காணப்பட்ட புதிய காத்தான்குடி அல் அக்ஸா முகைதீன் பள்ளி வீதி 107 மில்லியன் ரூபாய் செலவில் முழுமையாக புனரமைப்பு செய்யப்பட்டு வருவதாக போக்குவரத்து அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார்.
இன்று காலை குறித்த வீதியைப் பார்வையிட நேரடியாக விஜயம் செய்த அமைச்சின் செயலாளர் இவ்வாறு தெரிவித்தார்.
அல் அமீன் மகா வித்தியாலயம்,அல் அக்ஸா ஜும்மா மஸ்ஜித்,ஆதார வைத்தியசாலை,மத்திய கல்லூரி உட்பட பல முக்கிய அரச நிறுவனங்களுக்கு தினமும் பல ஆயிரம் பொதுமக்கமளும்,பாடசாலை மாணவர்களும் பல்வேறு அவலங்களுடன் இவ்வீதியூடாகவே பயணம் செய்து வருகின்றனர்.
இதனை தேசிய மக்கள் சக்தி பிராந்திய தலைவர்கள் அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து இவ்வீதி இவ்வாண்டு இறுதிக்குள் முழுமையாக புனரமைக்கப்படவுள்ளது.
கிழக்கு மாகாண ஆளுநரின் இணைப்புச் செயலாளர் யூ எல் எம் அப்துல்லா தேசிய மக்கள் சக்தி முக்கியஸ்தர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.



