உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

March 15, 2026

Hot News

IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!
IMG-20260301-WA0055
வளைகுடா போரும்: அழிவை நோக்கிய நகர்வுகளும்.!!!

இருவேறு விபத்துகளில் தந்தை பலி, மகன் படுகாயம்.!!!

(ஜே.கே)

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியூடாக பயணித்துக் கொண்டிருந்த கார் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து, கிரான்குளம் விஷ்ணு ஆலயத்திற்கு அருகில் இருந்த மின்கம்பத்தில் மோதி இன்று காலை விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ் விபத்தில் காரில் பயணம் செய்த சாரதி காயமடைந்துள்ளதுடன் கார் பலத்த சேதமடைந்துள்ளது. அத்தோடு உயர் மின் அழுத்த மின்சாரக் கம்பம் உடைந்து விழுந்துள்ளதால் அப்பகுதியில் மின் தடையும் ஏற்பட்டிருந்தது.

இந்த நிலையில் தடைப்பட்டுள்ள மின்சார விநியோகத்தினை மீள வழமைநிலைக்கு கொண்டுவருவதற்காக மின்சாரசபை ஊழியர்கள் அப்பகுதியில் பணிகளை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது மட்டக்களப்பு-கல்முனை வீதியில் தனது மகனுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவர் மின்சார கம்பியில் கழுத்துப்பகுதி சிக்குண்டு ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

மோட்டார் சைக்கிளில் பயணித்த மகன் காயமடைந்த நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் பொலிஸாரினால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் அம்பாறை மாவட்டத்தின் சென்றல்கேம்ப் பகுதியை சேர்ந்த 42வயதுடைய முகமட் றிஸ்வான் என்பவரே உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பிலிருந்து சென்றல்கேம்புக்கு சென்றவரே விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 703542

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time