உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!
IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!

உணவு கையாளும் நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு ;தைபொய்ட் தடுப்பூசி ஏற்றும் செயற்பாடு.!!!

(நூருல் ஹுதா உமர்)

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட உணவு கையாளும் நிறுவனங்களில் பணிபுரியும் நபர்களுக்கு தைபொய்ட் (Typhoid) தடுப்பூசி ஏற்றும் செயற்பாடுகள் இன்று (28) இடம் பெற்றது.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் திருமதி சகிலா இஸ்ஸடீனின் ஆலோசனைக்கமைய சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இச்செயற்பாட்டில் 37 நபர்கள் தடுப்பூசி ஏற்றிக் கொண்டனர்

தைபொய்ட் (Typhoid) என்பது salmonella என்னும் ஒரு வகை பக்டீரியாவால் பரவும் ஒரு தீவிரமான தொற்று நோயாகும். இது மாசுபட்ட உணவு மற்றும் குடிநீரினால் பரவுவதுடன் இத் தொற்றினால் உலகலாவிய ரீதியில் கோடிக்கணக்கானோர் பாதிக்கப்படுகின்றனர்.

இந் நோயின் அறிகுறிகளாக நீண்ட நாட்களாக காய்ச்சல், வயிற்று வலி, ஈரல் மற்றும் முதுகு வலி, வாந்தி மனச் சோர்வு, குடல் சீர் கேடுகள் என்பன ஏற்படும்.

எனவே இதிலிருந்து பாதுகாப்பு பெற்றுக் கொள்ளும் ஒரே வழி அனைத்து உணவு கையாளும் நிறுவனங்களிலும் பணிபுரியும் நபர்களும் தடுப்பூசி ஏற்றி இத்தொற்றிலிருந்து பாதுகாப்பு பெறுவதாகும் என சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 714089

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time