உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

March 24, 2026

Hot News

Print
மக்கள் ஒத்துழைப்பே பாதுகாப்பின் அடித்தளம்.!!!
15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!

Share :

உணவு பாதுகாப்பு சட்டத்தை மீறி மலசலகூடத்திற்கு அருகில் இடியப்பம் தயாரித்த பெண்மீது சட்ட நடவடிக்கை.!!!

(ஜே.கே)

உணவு பாதுகாப்பு சட்டத்தை மீறி,சுகாதாரத்துக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் உணவு தயாரிப்பில் ஈடுபட்டு அவற்றை விற்பனை செய்து வந்த பெண்ணொருவர் மீது மட்டக்களப்பில் சுகாதார அதிகாரிகள் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

மட்டக்களப்பு நகரிலுள்ள வீடு ஒன்றில் மலசல கூடத்திற்கு அருகில் இடியப்பம் தயாரித்து அவற்றை பொதுமக்களுக்கு விற்பனை செய்து வந்த பெண்மணொருவர் குறித்து சுகாதார அதிகாரிகளுக்கு பொது மக்களிடமிருந்து கிடைத்த தகவலை அடுத்து குறித்த இடத்துக்கு விஜயம் செய்த பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மேற்படி சுகாதாரத்துக்கு தீங்கு விளைவிக்கும் இடத்தை கண்டறிந்ததுடன் குறித்த பெண்ணின் மீது வழக்கு தாக்கலும் செய்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் எஸ். முரளீஸ்வரனின் பணிப்புரையின் பேரில் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் இ .உதயகுமாரின் வழிகாட்டலில் பொது சுகாதார பரிசோதகர்கள் குறித்த சுகாதாரத்துக்கு தீங்கு விளைவிக்கும் இடத்தை சுற்றி வளைத்து மேற்படி பெண் மீது வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

மலசல கூடத்துக்கு அருகில் இடியப்பம் தயாரித்து அவற்றை மேற்குறிப்பிட்ட பெண் பொது மக்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 718446

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time