“வாழும்போதே வாழ்த்துவோம்” நிகழ்வில்; 150 க்கு மேற்பட்டவர்களுக்கு – விஷேட விருது வழங்கி கௌரவிப்பு.!!!
(எம்.ரீ.எம்.பாரிஸ்)
கல்வி,கலை,கலாச்சாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தம்மை ஈடுபடுத்தி தமது கிராமத்தின் வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றிய சமூக முன்னோடிகளை “வாழும்போதே வாழ்த்துவோம்” எனும் அத்துகல கிராமத்தின் வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு பொலன்னறுவை மாவட்டத்தின் வெலிகந்த அத்துகல பொது மைதானத்தில் நடைபெற்றது.
அத்துகல ஹைஅத்துல் உலமா அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பேருவளை ஜாமியா நளீமியா கலாபீடத்தின் இஸ்லாமிய கற்கை பீட சிரேஷ்ட விரிவுரையாளர் எஸ்.எச்.எம்.பளீல் (நளீமி), பொலன்னறுவை மாவட்ட அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் தலைவர் எம்.எம்.அலாவுதீன் (பலாஹி), கிழக்கு மாகாண ஆளுநரின் பிரத்தியேக இணைப்புச் செயலாளர் யூ.கே.எம். அப்துல்லாஹ் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது தமது கிராமத்தின் வளர்ச்சிக்காகவும், சமூக முன்னேற்றத்திற்காகவும் பங்காற்றிய உலமாக்கள், கல்விமான்கள்,அரச உத்தியோகத்தர்கள், ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரிகள்,
சமூக செயற்பாட்டாளர்கள், பட்டதாரிகள்,சமூக முன்னோடிகள் என 150 க்கு மேற்பட்டவர்களுக்கு அவர்கள் “வாழும்போதே வாழ்த்துவோம்” எனும் விஷேட விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.






















