பெரிய நீலாவணையில் 18 வயது இளைஞன்: தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு – பொலிஸார் விசாரணை.!!!
-பாறுக் ஷிஹான்-
இளைஞன் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் இன்று இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் 18 வயது மதிக்கத்தக்க இளைஞனே இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் அவரது வீட்டில் இருந்து பொலிஸாரினால் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
காதல் விவகாரம் அல்லது வேறு ஏதாவது தனிப்பட்ட காரணமாக குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதா என ஆரம்ப விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.
இந்த நிலையில் சடலம் மீட்கப்பட்டு திடீர் மரண விசாரணை அதிகாரியின் விசாரணையின் பின்னர் கல்முனை பகுதியிலுள்ள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
சம்பவம் தொடர்பில் பெரிய நீலாவணை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.