உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260809-WA0043
பொதுமக்களின் நிம்மதிக்கு புதிய பாதுகாப்பு; ஒலி மாசுக்கு கடும் கட்டுப்பாடு.!!!
IMG-20260802-WA0014
தேசிய ஷுஹதாக்கள் தினம்: வரலாற்றின் இரத்தச் சுவடுகளும் நல்லிணக்கத்தின் அவசியமும்.!!!

Share :

வயல்வெளியில் மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டது: பொலிஸார் தீவிர விசாரணை.!!!

-பாறுக் ஷிஹான் – நூருல் ஹூதா உமர்-

வயல்வெளியில் கண்டெடுக்கப்பட்ட சடலம் சம்மாந்துறை பொலிஸாரினால் அடையாளம் காணப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்று (01) மீட்கப்பட்ட சடலம் உறவினர்களால்  அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் சம்மாந்துறை சாலி வீதியைச் சேர்ந்த 50 வயது மதிக்கத்தக்க  ஆதம்பாவா ரியால்   என்பவராவார்.

இன்று காலை குறித்த பகுதியில் சடலம் ஒன்று  காணப்படுவதாக  பொதுமக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

ஆரம்பத்தில் அடையாளம் காணப்படாத நிலையில் காணப்பட்ட போதிலும் பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர்  உயிரிழந்தவரின் விவரங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மரணத்திற்கான காரணம் மற்றும் ஏனைய சட்ட ரீதியான நடவடிக்கைகள் தொடர்பில் சம்மாந்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1066653

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time