அஹதிய்யா பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பும் – இப்தார் நிகழ்வும்.!!!
(கற்பிட்டி செய்தியாளர் எம் எச் எம் சியாஜ்)
பெருக்குவட்டான் அல் மின்ஹாஜ் அஹதிய்யா பாடசாலையின் வருடாந்த ரமழான் போட்டி நிகழ்ச்சியின் பரிசளிப்பு விழாவும் இப்தார் நிகழ்வும் அஹதிய்யாவின் அதிபர் மெளலவியா பஸீலா பேகம் தலைமையில் பெருக்குவட்டான் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் பிரதான மண்டபத்தில் இடம் பெற்றது.
இந்நிகழ்வின் பிரதம பேச்சாளராக புத்தளம் இஸ்லாஹிய்யா பெண்கள் அரபுக்கல்லூரி அதிபர் அஷ்ஷெய்க் எம்.ஏ.எல்.எம்.பஸ்லுல் பாரிஸ் (நளீமி) விஷேட விருந்தினர்களாக கணமூலை மதீனாபுரம் அஹதிய்யா அதிபர் அஷ்ஷெய்க் முஜிபுர் ரஹ்மான் (மனாரி), அஷ்ஷெய்க் எம்.றிஸ்விகான் (அஸ்ஹரி) ஆசிரியர்களான எம்.எச்.எம். ஸப்றாஸ்,எம்.பைரூஸ் மற்றும் முன்னால் அதிபர் எம். நஜ்முதீன் மற்றும் அஹதிய்யாவின் நிருவாகிகள்,கல்விமான்கள்,உலமாக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
அத்தோடு இந்நிகழ்விற்கு பல்வேறு வகையிலும் ஒத்துழைப்பு வழங்கிய அஹதிய்யா சமூகம், ஊர் மக்கள் அத்தோடு வினைத்திறனாக செயற்பட ஆலோசனைகள் வழங்கிய அகில இலங்கை அஹதிய்யா மத்திய சம்மேளன தேசிய பிரதித் தலைவர் பாரூக் பதீன் மற்றும் புத்தளம் மாவட்ட அஹதிய்யா பாடசாலைகளின் சம்மேளனம் ஆகியோருக்கும் அல் மின்ஹாஜ் அஹதிய்யாவின் அதிபர் தமது நன்றிகளை தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.