அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு; பண்டிகை முன்னணி முற்பணம் வழங்க அறிவிப்பு.!!!
அரசாங்க உத்தியோகத்தர்களுக்குப் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு 4,000 ரூபாவிற்கு மிகைப்படாத விசேட முற்பணம் வழங்குவதற்கான சுற்றுநிருபம் பொதுநிர்வாக அமைச்சு மூலம் வெளியிடப்பட்டுள்ளது.
பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எஸ். ஆலோகபண்டாரவினால் அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கு இச்சுற்றுநிருபம் அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒவ்வொரு வருடமும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் இம்முற்பணம் ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடங்கி பெப்ரவரி மாத இறுதித் தினத்திற்குள் நிறைவு செய்யப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த முற்பணத் தொகை 8 சதவீத வருடாந்த வட்டியுடன் 10 சமமான மாதத் தவணைகளில் அறவிடப்பட வேண்டும் என பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் வெளியிட்டுள்ள சுற்றுநிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.