உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260510-WA0104
ஈராக் மண்ணில் இஸ்ரேலின் ரகசிய ராணுவத் தளம்: மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிப்பு.!!!
IMG-20260503-WA0077
வன்முறை கலாச்சாரம் அரசியலில்: வெற்றியா அல்லது தோல்வியா.???

Share :

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு: பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நாளை வைப்பு.!!!

அரசாங்கத்தின் அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் நிதி உதவி பெற தகுதியுடைய பயனாளிகளுக்கான மார்ச் மாத கொடுப்பனவுத் தொகை நாளை வியாழக்கிழமை (12) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படும் என இலங்கை நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

இத்திட்டத்தின் கீழ் 1,408,635 குடும்பங்களுக்கு இந்த மாதத்திற்கான கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொடுப்பனவுப் பகிர்வின் முதற்கட்டமாக, பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் 11,179,801,250 ரூபாவுக்கும் அதிகமான தொகை வைப்பிலிடப்படவுள்ளது.

மேலும், திட்டத்தின் இரண்டாம் கட்ட கொடுப்பனவாக 2,350,530,000 ரூபாவுக்கும் அதிகமான தொகையும் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நாளை வைப்பிலிடப்படும் என நலன்புரி நன்மைகள் சபை குறிப்பிட்டுள்ளது.

இதன் மூலம் ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு அரசாங்கத்தின் நலன்புரி உதவி தொடர்ச்சியாக வழங்கப்படுகின்றது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 806095

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time