முதியோருக்கான ‘அஸ்வெசும’ கொடுப்பனவு வங்கி கணக்குகளில் – 3,468 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.!!!
முதியோருக்கான ‘அஸ்வெசும’ கொடுப்பனவு நாளை (26) நேரடியாக வங்கி கணக்குகளுக்கு அனுப்பப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
முதலாம் கட்டத்தின் கீழ், 70 வயதிற்கு மேற்பட்ட 622,462 முதியோர்களுக்காக 3,112,310,000 ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் கட்டத்தின் கீழ், 70 வயதிற்கு மேற்பட்ட 71,339 முதியோர்களுக்காக 356,695,000 ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதியோரின் நலனைக் கருத்தில் கொண்டு, இக்கொடுப்பனவு நேரடியாக வங்கி கணக்குகளுக்கு அனுப்பப்படுவது முக்கிய நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.