மட்டக்களப்பு-மண்முனை பாலத்திற்கு அருகே: 1,80,000 மில்லி லீட்டர் கோடா 67,500 மில்லி லீட்டர் கசிப்பு மீட்பு – இருவர் கைது.!!!
மட்டக்களப்பு: மண்முனை பாலத்திற்கு அருகாமையில் உள்ள தீவுப் பகுதியில் கொக்கட்டிச்சோலை பொலிஸார் இன்று (12) வியாழக்கிழமை நடாத்திய திடீர் சுற்றிவளைப்பில்ல் 1,80,000 மில்லி லீட்டர் கோடா மற்றும் 67,500 மில்லி லீட்டர் கசிப்பு போதைப்பொருள் மீட்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
இந்த சோதனையின் போது, கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டிருந்த தாளங்குடா மற்றும் மாவிலங்கத் துறை பகுதிகளைச் சேர்ந்த 26 மற்றும் 36 வயதுடைய இரண்டு நபர்களை கைது செய்தனர்.
அத்தோடு அவர்களிடம் இருந்து இரண்டு பரள்கள் மற்றும் இரண்டு கலன்களில் தயாரித்து வைத்திருந்த போதைப்பொருட்களையும் பொலிசார் மீட்டனர்.
கொக்கட்டிச்சோலை பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், கொக்கட்டிச்சோலை பதில் நிலைய பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் ஜோய் தலைமையிலான பொலிசார் இந்த சுற்றிவளைப்பை நடத்தினர். இதில் கேஸ் 01, கேஸ் அடுப்பு 01 மற்றும் சுத்து பைப் 02 ஆகிய போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
இச்சம்பவம் தொடர்பாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மோற்கொண்டு வருகின்றனர்.



