உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260510-WA0104
ஈராக் மண்ணில் இஸ்ரேலின் ரகசிய ராணுவத் தளம்: மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிப்பு.!!!
IMG-20260503-WA0077
வன்முறை கலாச்சாரம் அரசியலில்: வெற்றியா அல்லது தோல்வியா.???

Share :

பிரஜாசக்தி நிதி ஒதுக்கீட்டின் கீழ்: கிராமசேவகர் பிரிவுக்கு ஒரு வீடு – ஆலையடிவேம்பில் அடிக்கல் நடும் நிகழ்வு.!!!

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

பிரஜாசக்தி நிதி ஒதுக்கீட்டின் கீழ் தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசம் உட்பட தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு புதிய வீடுகளை அமைத்துக் கொள்வதற்கான வேலைத்திட்டத்தின் கீழ் ஆரம்பிக்கட்ட அடிக்கல் நடும் நிகழ்வு ஆலையடிவேம்பு பிரதேச செயலகப்பிரிவில் (11) நேற்று புதன்கிழமை நடைபெற்றது.

ஆலயடிவேம்பு பிரதேச செயலகப்பரிவுக்கு ஒதுக்கப்பட்ட 22 வீடுகளில் முதல் 03 வீடுகளுக்கு அடிக்கல் நடும் நிகழ்வு அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும், அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினரும், பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவாவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வுகளில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர், அம்பாறை மாவட்ட தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மாவட்ட உத்தியோகத்தர்கள், தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தொழில் நுட்ப அலுவலர் மற்றும் பிரதேச தேசிய மக்கள் சக்தியின் செயற்பாட்டாளர்கள், பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர், பிரஜாசக்தி தவிசாளர்கள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 810937

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time