உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260510-WA0104
ஈராக் மண்ணில் இஸ்ரேலின் ரகசிய ராணுவத் தளம்: மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிப்பு.!!!
IMG-20260503-WA0077
வன்முறை கலாச்சாரம் அரசியலில்: வெற்றியா அல்லது தோல்வியா.???

Share :

வீதி விபத்துகளைத் தடுக்கும் நடவடிக்கை: காத்தான்குடி பொலிஸ் பிரிவில் 70 துவிச்சக்கர வண்டிகள் சோதனை.!!!

(ஜே.கே)

அதிகரித்து வரும் வீதி விபத்துக்களை கட்டுப்படுத்த மட்டக்களப்பு மாவட்டத்தில் பொலிஸ் மா அதிபரின் பணிப்புரையின் கீழ் பொலிசார் பாரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்

மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலாத்ரத்தினவின் வழிகாட்டலில் காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஐ பி அழக கோனின் பணிப்புரையின் கீழ் மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் ஆரையம்பதி பிரதேசத்தில் போக்குவரத்து பொலிசாரினால் மேற்கொள்ளப்பட்டது

இந்நடவடிக்கையின் போது சுமார் எழுபது துவிச்சக்கர வண்டிகள் பொலிசாரினால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு இருளில் ஒளிரும் ஸ்டிக்கர்கள்  ஒட்டப்பட்டன

பின்னால் வரும் வாகனங்களுக்கு குறித்த ஸ்டிக்கர்கள் ஊடக முன்னாள் துவிச்சக்கர வண்டி செல்வதை அடையாளப்படுத்த முடியும். அதனால் விபத்துகளை தவிர்க்க முடியும் என காத்தான்குடி பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி ஆர் எம். சந்தன பொதுமக்களுக்கு விளக்கமளித்தார்

இதேவேளை இரவு வேளையில் துவிச்சக்கர வண்டி செலுத்தும் வயோதிபர்கள் கறுப்பு மற்றும் கடும் பச்சை நிற ஆடைகளை அணியாமல் வெள்ளை நிற ஆடைகளை அணிந்து இருள் நிறைந்த இடங்களில் துவிச்சக்கர வண்டியில் செல்வதனூடாக பின்னால் வரும் வாகனங்களுக்கு ஆட்களை அடையாளப்படுத்த முடியும் எனவும் தெரிவித்த அவர் துவிச்சக்கர வண்டிகளை சரியான முறையில் பயன்படுத்தாதவர்கள் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 810935

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time