பிறந்து 2 நாட்களேயான பெண் சிசு சடலம் மீட்பு – பொலிசார் தீவிர விசாரணை.!!!
மீகஸ்வெவ, பள்ளியகொடைல்ல பகுதியில் பிறந்து இரு நாட்களேயான பெண் சிசுவின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செவ்வாய்க்கிழமை (24) மாலை, தனியார் காணி ஒன்றில் சுமார் 2 நாள் வயதுடைய குழந்தையின் உடல் காணப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், மீகஸ்வெவ பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளை ஆரம்பித்தனர்.
அங்கு மேற்கொண்ட ஆரம்ப விசாரணைகளில், மீட்கப்பட்டது பெண் சிசுவின் சடலமாக இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.
மரணத்திற்கான காரணத்தை கண்டறிய நீதவான் உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பில் மீகஸ்வெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.