உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260510-WA0104
ஈராக் மண்ணில் இஸ்ரேலின் ரகசிய ராணுவத் தளம்: மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிப்பு.!!!
IMG-20260503-WA0077
வன்முறை கலாச்சாரம் அரசியலில்: வெற்றியா அல்லது தோல்வியா.???

Share :

போதைப்பொருள் ஒழிப்புக்கு திருகோணமலையில் புதிய முன்னெடுப்பு – மாவட்ட செயற்பாட்டு குழுக்கள் அமைப்பு.!!!

போதைப்பொருள் ஒழிப்புக்கான “நாடும் ஒன்றாக” தேசிய செயற்திட்டத்தின் கீழ், திருகோணமலை மாவட்ட செயற்பாட்டு குழுக்களை அமைக்கும் விசேட கூட்டம் நேற்று (24) மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா, மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன, மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் முப்படை தளபதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

போதைப்பொருள் விநியோகம் மற்றும் நுகர்வு ஆகியவற்றை முற்றாக கட்டுப்படுத்தி, அதன் சங்கிலித் தொடர்பை துண்டிப்பதே இந்த மாவட்டக் குழுக்களின் முக்கிய இலக்காகும் எனக் குறிப்பிடப்பட்டது.

இந்நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் சுனில் வட்டகல, “போதைப்பொருள் ஒழிப்பில் அரசாங்கம் பல சவால்களை எதிர்கொள்கிறது. விநியோகம் மற்றும் நுகர்வு ஆகிய இரு முக்கிய கூறுகளையும் அடையாளம் கண்டு அகற்றுவதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும்” என தெரிவித்தார்.

சமூகத்தை பாதிக்கும் போதைப்பொருள் பிரச்சினையை ஒழிக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய அவசியம் வலியுறுத்தப்பட்டது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 810995

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time