கத்தார் சாரிட்டி நிறுவனம்: 6 பாடசாலைகளுக்கு 80 துவிச்சக்கர வண்டிகள் வழங்கல்.!!!
மூதூர் வலயப் பாடசாலைகளின் கோரிக்கைக்கு அமைவாக, கத்தார் சாரிட்டி நிறுவனத்தினால் முதற்கட்டமாக 6 பாடசாலைகளுக்கான 80 துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வு மூதூர் அல்-மினா மஹா வித்தியாலயத்தில் அண்மையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மூதூர் வலயக் கல்வி பணிப்பாளர் எ. எல். சிராஜ், மூதூர் வலயக் கல்வி அலுவலக அனர்த்த முகாமைத்துவ இணைப்பாளர் எ. எல். எம். சதாக், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் கத்தார் சாரிட்டி நிறுவனத்தின் உத்தியோகத்தர்களான ஏ. எல். எம். முசக்கிர் மற்றும் என். எம். ஏ. அலீம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் அதன் பங்காளி நிறுவனமான 3CD அமைப்பின் பிரதிநிதிகளும் இந்நிகழ்வில் பங்கேற்று மாணவர்களுக்குத் துவிச்சக்கர வண்டிகளை கையளித்தனர்.
மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு இத்திட்டத்தை நடைமுறைப்படுத்திய கத்தார் சாரிட்டி நிறுவனத்திற்கும், அதன் திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. ஹஃப்லீன் ஃபுவாத் அவர்களுக்கும் பாடசாலை சமூகத்தினர் தங்களது நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.


