கொழும்பு – மட்டக்களப்பு ரயில் சேவை விரைவில் மீள ஆரம்பம்.!!!
வெள்ளத்தினால் சேதமடைந்த கொழும்பு – மட்டக்களப்பு பிரதான ரயில் பாதை தற்போது மன்னம்பிட்டியில் துரிதமாக திருத்தம் செய்யப்பட்டு வருகிறது.
பேரிடர் காலத்திலிருந்து கொழும்பு – மட்டக்களப்பு ரயில் சேவை முற்றாக பாதிக்கப்பட்டது. தற்போது இயல்பு நிலைக்கு திரும்பும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு, சேவையை மீள ஆரம்பிப்பதற்காக ரயில் பாதைகள் ஆங்காங்கே திருத்தப்படுகின்றன.
குறிப்பாக, மன்னம்பிட்டியில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் ரயில் பாதைகள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டிருந்தன. அங்கு கனரக இயந்திரங்கள் மற்றும் தொழிலாளர்களின் அர்ப்பணிப்பான சேவையின் மூலம் இரவு பகலாக பாதைகள் திருத்தப்பட்டு வருகின்றன.
மன்னம்பிட்டி பாலம் மற்றும் ரயில் பாதை முழுமையாக திருத்தப்பட்ட பின்னர், விரைவில் கொழும்பு – மட்டக்களப்பு ரயில் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படுமென நம்பப்படுகிறது.


