உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

March 25, 2026

Hot News

Print
மக்கள் ஒத்துழைப்பே பாதுகாப்பின் அடித்தளம்.!!!
15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!

Share :

கொழும்பு மாநகர சபையின் மேயராக பதவியேற்றார்; விராய் கெலி பல்தசார்.!!!

கொழும்பு மாநகர சபையின் மேயர் விராய் கெலி பல்தசார் இன்று (18) பதவியேற்றார்.

2025 உள்ளூராட்சித் தேர்தலில் அதிகம் அவதானம் செலுத்தப்பட்ட வேட்பாளராக இருந்த தேசிய மக்கள் சக்தியின் விராய் கெலி பல்தசார், நேற்று முன்தினம் (16) கொழும்பு மாநகர சபையின் மேயராக பெரும்பான்மை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இன்று (18) காலை பதவியேற்பு விழாவில் பங்கேற்ற அவர், மக்களின் பங்கேற்புடன் கொழும்பின் பிரச்சினைகளைத் தீர்க்க நம்புவதாகவும் அவர் கூறினார்.

மேலும் கருத்து தெரிவிக்கையில்,

”கொழும்பு மாநகர சபையின் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதை ஒருபோதும் தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொள்ளப் போவதில்லை என்றும், தனது வெற்றி ஒரு கூட்டு முயற்சியின் விளைவாகும். இந்த நகரத்தையும் மாற்றுவோம்” என்று குடிமக்கள் குரல் எழுப்பியதாகவும் கூறிய மேயர், இந்த நகரத்தை மாற்ற வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது என்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது குறிப்பிட்டார்.

கொழும்பு இலங்கையின் பணக்கார நகரமாக இருந்தாலும், அதன் இருண்ட பக்கம் இப்போது கொழும்பை மூழ்கடித்துள்ளதாக கூறிய அவர், நகரத்தில் வாழும் மக்களுக்கு வெளிச்சம் வழங்குவதில் தனக்கு மிகப்பெரிய பங்கு இருப்பதாகவும் அவர் கூறினார்.

ஒழுங்கற்ற திட்டங்கள் காரணமாக கொழும்பில் பல பெரிய பிரச்சினைகள் இருப்பதாகவும், அவை அனைத்தும் தீர்க்கப்பட வேண்டும்” என்றும் அவர் கூறினார்.

கொழும்பு நகரத்தை உலகின் மிகவும் வளர்ந்த நகரங்களில் ஒன்றாக மாற்ற வேண்டும் என்றும், கட்சி அல்லது நிற வேறுபாடின்றி 117 உறுப்பினர்களின் கூட்டுப் பணியிலேயே வெற்றி அடங்கியுள்ளது என்றும், இதற்கு ஆதரவளிக்குமாறும் கொழும்பு மேயர் கேட்டுக் கொண்டார்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 719755

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time