உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260628-WA0045
பற்றி எரியும் வர்த்தக நிலையங்களும்... முதலாளிமார்களின் அசட்டுப் போக்கும்.!!!
IMG-20260621-WA0046
வயதான பெற்றோர்களின் பாதுகாப்பும், சமூக பொறுப்பும்: புதிய சட்டமூலமும்.!!!

Share :

தனியார் வைத்தியசாலையில் காலாவதியான மருந்துகள்: நீதிமன்றம் 100,000 ரூபா அபராதம் விதிப்பு.!!!

-பாறுக் ஷிஹான்-

கலாவதியான மருந்துப் பொருட்களை பாவனைக்கு வைத்திருந்த கல்முனை தனியார் வைத்தியசாலைக்கு  100,000/= ரூபாய் அபராதம் கல்முனை நீதவான் நீதிமன்று விதித்துள்ளது.

அம்பாறை மாவட்டம் கல்முனை பிரதேசத்தில் இயங்கி வருகின்ற பிரபல தனியார் வைத்தியசாலைக்கு அம்பாறை மாவட்ட நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் மாவட்ட பொறுப்பதிகாரி   தலைமையிலான புலனாய்வு உத்தியோகத்தர்கள் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போது குறித்த வைத்திசாலையில் பாவனைக்கு வைத்திருந்த காலாவதியான மருந்துப் பொருட்களை கைப்பற்றியதுடன் குறித்த வைத்திய சாலைக்கு எதிராக கல்முனை நீதவான் நீதிமன்றத்தில்  வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இதற்கமைய குறித்த வழக்கானது   வியாழக்கிழமை (12)  கல்முனை நீதிவான்  நீதிமன்றத்தில் விசாரணைக்கு  எடுத்துக் கொள்ளப்பட்ட போது   குற்றத்தை ஏற்றுக் கொண்ட தனியார் வைத்தியசாலையின் முகாமையாளருக்கு நீதிமன்றத்தினால் 100,000/= ரூபா அபராதம் விதிக்கப்பட்டது.

குறித்த வழக்கின் அம்பாறை மாவட்ட நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் சார்பாக நீதிமன்றத்தில் ஆஜராகிய புலனாய்வு உத்தியோகத்தர் இஷட்.எம் ஸாஜீத் குறித்த வழக்கு சம்பந்தமாக   மன்றில் விளக்கமளித்தமை குறிப்பிடத்தக்கது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 933647

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time