உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

March 15, 2026

Hot News

IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!
IMG-20260301-WA0055
வளைகுடா போரும்: அழிவை நோக்கிய நகர்வுகளும்.!!!

பண்டிகைக் கால சிறப்பு பேருந்து சேவைகள்; இன்று முதல் ஆரம்பம்.!!!

நத்தார் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு, மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்ல வசதியாக இன்று (24)  முதல் நாடளாவிய ரீதியில் பண்டிகைக் கால சிறப்பு பேருந்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இலங்கை போக்குவரத்து சபை (SLTB) மூலம் தொலைதூரப் பயணிகளுக்காக மேலதிகமாக 80 பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம், பயணிகளின் அதிகரித்த தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தேசிய போக்குவரத்து ஆணையம் (NTC) சார்பில், பயணிகள் நெரிசல் அதிகரிக்கும் நிலையங்களில் கூடுதல் பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதேபோல், முக்கிய பேருந்து நிலையங்களில் விசேட அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, சேவைகள் சீராக நடைபெறுவதற்கான கண்காணிப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

மேலும், தனியார் பேருந்து சேவைகளுடனும் ஒருங்கிணைந்த முறையில் இந்த சிறப்பு போக்குவரத்து திட்டம் செயல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில், கொழும்பிலிருந்து வெளிமாவட்டங்களுக்கு பயணம் செய்யும் பயணிகள் இந்த பண்டிகைக் கால சிறப்பு பேருந்து சேவைகளை பயன்படுத்தி பாதுகாப்பான மற்றும் வசதியான பயணத்தை மேற்கொள்ளுமாறு போக்குவரத்து அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 702992

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time