உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

March 15, 2026

Hot News

IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!
IMG-20260301-WA0055
வளைகுடா போரும்: அழிவை நோக்கிய நகர்வுகளும்.!!!

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா; மஹர சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி.!!!

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா, உடல் நலக் குறைவு காரணமாக இன்று (30) மஹர சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரது தற்போதைய உடல் நிலையை கருத்தில் கொண்டு, வைத்தியர்களின் பரிந்துரையின் அடிப்படையில் மஹர சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இராணுவத்தினால் டக்ளஸ் தேவாநந்தாவிற்கு தனிப்பட்ட பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட துப்பாக்கி ஒன்று, திட்டமிட்ட குற்றவாளியான மாகந்துர மதுஷிடமிருந்து கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு உரிய பதில் வழங்கத் தவறியமை காரணமாக, அவர் அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து, தடுப்பு காவல் உத்தரவின் கீழ் அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, எதிர்வரும் ஜனவரி 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், அவரது உடல் நலன் தொடர்பான மேலதிக தகவல்கள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 702957

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time