உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

March 15, 2026

Hot News

IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!
IMG-20260301-WA0055
வளைகுடா போரும்: அழிவை நோக்கிய நகர்வுகளும்.!!!

அனர்த்த கடமைகளிலிருந்து தற்காலிகமாக விலகிய – கிராம சேவையாளர்கள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்.!!!

(கற்பிட்டி நிருபர் சியாஜ்)

கற்பிட்டி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட சகல கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என சகலரும் வெள்ளிக்கிழமை (19) முதல் தற்காலிகமாக அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான சகல கடமைகளிலும் இருந்து விலகிக் கொள்வதாக இலங்கை ஐக்கிய கிராம உத்தியோகத்தர் சங்கத்தின் கற்பிட்டி கிளையும் , அகில இலங்கை பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் கற்பிட்டி கிளையும் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது

கற்பிட்டி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மண்டலக்குடா, கண்டக்குழி, ஆலங்குடா மற்றும் நிர்மல்புர ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் கிராம உத்தியோகத்தர்கள் அச்சுறுத்தப்பட்டமை, கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை, எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் மேற்க் கொண்டமை மற்றும் ஆலங்குடாவின் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் தாக்கப்பட்டமை ஆகிய காரணங்களை அடிப்படையாக கொண்டு அனர்த்த முகாமைத்துவ தத்தின் சகல கடமைகளிலும் இருந்து தற்காலிக விலகிக் கொள்ள தீர்மானித்துள்ளது என இலங்கை ஐக்கிய கிராம உத்தியோகத்தர் சங்கத்தின் கற்பிட்டி கிளையும் , அகில இலங்கை பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் கற்பிட்டி கிளையும் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் நான்கு கிராம உத்தியோகத்தர்களும் ஒரு பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தரும் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் பதிவிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 702998

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time