உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260510-WA0104
ஈராக் மண்ணில் இஸ்ரேலின் ரகசிய ராணுவத் தளம்: மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிப்பு.!!!
IMG-20260503-WA0077
வன்முறை கலாச்சாரம் அரசியலில்: வெற்றியா அல்லது தோல்வியா.???

Share :

ஐஸ் போதைப்பொருளுடன் கணவன்–மனைவி கைது.!!!

மொரட்டுமுல்லை பொலிஸ் பிரிவில் 25 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கணவன்–மனைவி இருவரும் இன்று (17) கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், கட்டுபெத்த பகுதியில் இன்று காலை மேற்கொள்ளப்பட்ட சோதனையில் முச்சக்கர வண்டி நிறுத்தி பரிசோதிக்கப்பட்டது. அப்போது 15 கிராம் ஐஸ் வைத்திருந்த முச்சக்கர வண்டி சாரதி கைது செய்யப்பட்டார்.

அவரிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் பேரில், அங்குலானை பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் பொலிஸார் சோதனை நடத்தினர். அப்போது சந்தேகநபரின் மனைவி மேலும் 10 கிராம் ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்டவர்கள் மொரட்டுவை, அங்குலானை புகையிரத நிலைய வீதியைச் சேர்ந்த 31 மற்றும் 21 வயதுடைய தம்பதியினர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர்கள் இருவரும் நீண்டகாலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்ததுடன், இதன்மூலம் கோடிக்கணக்கான வருமானம் ஈட்டியிருப்பது விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் மொரட்டுவை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். இவர்களுக்கு போதைப்பொருள் வழங்கிய வலையமைப்பு, இதன் மூலம் ஈட்டப்பட்ட வருமானம், வங்கிக் கணக்கு பரிவர்த்தனைகள் உள்ளிட்ட விவரங்கள் குறித்து தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க பொலிஸார் நீதிமன்றத்தில் விண்ணப்பிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 804951

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time